இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி நேற்று லண்டனில் உள்ள புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. முதல் போட்டியில் அபார வெற்றியடைந்த இந்தியா அணி 2வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களம் இறங்கியது. டாஸ் வென்று பௌலிங்கை தேந்தெடுத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 49வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 246 எடுத்தது. அதிகபட்ச்சமாக மெயின் அலி 47 ரன்கள் மற்றும் டேவிட் வில்லி 41 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் களம் இறங்கிய இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரரானா ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சிக் கொடுத்தார். பின்னர் களம் இறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 38வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ரன்கள் எடுத்து படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரீஸ் டோப்ளி அதிரடியாக பந்து வீசி 6விக்கெட்களை வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-1 என சமநிலையில் உள்ளது. 3வது ஒரு நாள் போட்டி மான்செஸ்டர் நடைபெறுகிறது.
