சுற்றுப் பயணம் மூலம் அதிமுகவை கைப்பிடிக்க திட்டம்! – ஓ.பி.எஸ் அதிரடி!

கடந்த மாதம் 11ஆம் நாள் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் OPSஸை அடிப்படை பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கிய எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளர் ஆனார். அதற்கு பின் ஓபிஸ் அதிமுகவில் இருந்து நீக்குவது சர்வாதிகாரத்தின் உச்சம் என கூறிய அவர், மேலும் சட்ட விதிகளின் படி இந்த அறிவிப்பு செல்லாது என கூறினார். மிகவும் பேசு பொருளான இந்த மோதல்களுக்கு இடையில் ஓபிஸ் ஆதரவாளர்கள் அதிமுகவின் அலுவலகத்தை அடித்து சேதப்படுத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பிரச்சனையால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

edappadi-k-palaniswami
Edappadi K.Palaniswami

பிறகு சீல் அகற்றப்பட்டதை அடுத்து அமைச்சர் சி.வி. சண்முகம் அலங்கோலமாக சிதறிக் கிடைக்கும் அலுவலகத்தில் மேஜை, நாற்காலிகள், கம்ப்யூட்டர் மற்றும் மத்த ஆவணங்களும் சிதறிக் கிடப்பதாக அவர் கூறினார். மேலும் இங்கிருந்த பல அதிமுக சம்மந்தமான முக்கிய ஆவணங்கள் காணவில்லை என சி.வி.சண்முகம் புகார் அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருப்பது செல்லாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னிர் செல்வம் மனு தாக்கல் செய்து உள்ளார். நான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் அனுமதி தராமல் எந்த பொதுக்கூட்டமும் செல்லாது என கூறியுள்ளார்.

o-paneer-selvam
O. Paneerselvam

கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை நீக்கியுள்ளேன். அவருக்கு பதிலாக வைத்தியலிங்கம் புது இணை ஒருங்கிணைப்பாளராக நான் நியமித்து உள்ளேன் என்பதையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஓ.பி.எஸ். திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தனது சொந்த ஊரான தேனியில் இருந்து பயணத்தை தொடங்குவர் என்று கூறப்படுகிறது.

Spread the Info

Leave a Comment