பால்பாக்கெட்டில் ‘தம்பி’🐴 – இது நம்ம சென்னை நம்ம செஸ்!

சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுநாள் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்போட்டியின் ஆரம்ப விழா நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைப்பெற உள்ளது. பழமையாகவும், பெருமையாகவும் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் கருதப்படுகிறது. இத்தொடர் முதல் முறையாக இந்தியாவில் நடைப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 187 நாட்டின் செஸ் வீரர்கள் சென்னைக்கு வருகைத் தந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இத்தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

napier-bridge
napier bridge

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் கருப்பு வெள்ளையில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியின் சின்னமான ‘செஸ் தம்பி’ சின்னமும் பிரபலமாகி உள்ளது. இந்த வருடம் இப்போட்டியானது ரஷ்யாவில் நடைப்பெற இருந்தது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் தொடர் போர் காரணமாக வேறு நாட்டில் நடத்தலாம் முடிவு செய்யப்பட்டது. இறுதியாக சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் அந்த வாய்ப்பைப் பெற்றது. ‘சுவிஸ் சிஸ்டம்’ என்ற வெளிநாட்டு விதிமுறைப் படி இந்த தொடர் நடைப்பெற உள்ளது. இந்தியாவில் முதல் முறை நடைபெறுவதால் உலக நாடுகளின் பார்வை அனைத்தும் சென்னை பக்கம் திரும்பி உள்ளது.

chess-thambi

விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் வகையில் Curtain Raiser Rapid Rating Chess என கூறப்படும் இந்த சுற்றில் வெளியாட்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த சுற்றில் வெற்றிப்பெறுவோருக்கு 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எங்கும் எதிலும் செஸ் விழிப்புணர்வு காணப்படும் நிலையில் இந்த ஒலிம்பியாட்டின் சின்னமான ‘செஸ் தம்பி’ சின்னம் மற்றும் நம்ம சென்னை நம்ம செஸ் இன்று ஆவின் பால் பாக்கெட்டில் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

Spread the Info

Leave a Comment