44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி! பிரதமரை நேரில் அழைக்கும் தமிழகக்குழு!

சென்னையில் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கான ப்ரோமோ விடியோவை நேற்று வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக கலாச்சாரம் போற்றும் வகையில் பெண்கள் பரதநாட்டியம் ஆடுவது போல் இந்த டீஸர் வெளிவந்துள்ளது.

chess-olymbiad_teaser

இதன் தொடக்க விழா மற்றும் வருகின்ற 28ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதனால் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகவும் பழமையாகவும், பெருமையாகவும் பார்க்கப்படுகிறது. இப்போட்டியானது முதல் முறையாக இந்தியாவில் நடைப்பெறுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

narendra-modi

இதற்காக தமிழக குழு பிரதமருக்கு அழைப்பு விடுக்க வரும் 19ஆம் தேதிக்கு டெல்லிக்கு செல்ல உள்ளனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட நிலையில், மக்களவை உறுப்பினர் கனி மொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் டெல்லி சென்று அழைப்பு விடுக்க உள்ளனர்.

m.k.stalin
Spread the Info

Leave a Comment