செஸ்♟️ ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பதக்கங்களை🏅 வழங்க உள்ளார்!

தற்போது சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிற செஸ் ஒலிம்பியாட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியின் தொடக்க விழாவானது கடந்த மாதம் 28ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

chess-olympiad
Chess Olympiad Chennai

மேலும் தமிழ்நாட்டின் பல பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியானது முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இன்று நடைபெறும் கடைசி சுற்றுடன் இப்போட்டி நிறைவடைய உள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் மொத்தமாக 17 புள்ளிகள் பெற்று உஸ்பெகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. மேலும் 17 புள்ளிகள் மற்றும் 16 புள்ளிகள் பெற்று அமெரிக்கா மற்றும் இந்தியா இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன.

chess-olympiad

போட்டி இன்றுடன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் யார் முதல் இடத்தை பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்போட்டி இன்றுடன் முடியவுள்ள நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

M.K. Stalin

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மெய்ய நாதன். செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளன. மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலில் அவர்களின் தலைமையில் கீழ் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.

Spread the Info

Leave a Comment