நேற்று டெல்லியில் விமானத்தின் மீது கார் மோதிய வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து பாட்னாவிற்கு செல்வதற்கான இண்டிகோ விமானம் ரெடியாக இருந்தது. அப்போது அங்கிருந்து தீடிரென்று வந்த கார்ரானது விமானத்தின் முன் பகுதியில் மோதியது. காரனது நின்று கொண்டு இருந்த விமானத்தின் சக்கரத்தின் முன் பகுதியில் மோதியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஒருவேளை சக்கரத்தில் மோதி இருந்தா பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். இந்த நிகழ்வால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த நிகழ்வால் சேவை தாமதமாகவில்லை. சரியான நேரத்திற்கு சென்றதாக உயர் அதிகரிகரிகள் கூறுகின்றனர். வாகனத்தை ஓட்டியவர் மது அருந்தவில்லை. உடல் சோர்வு காரணமாக இப்படி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

விமானத்துக்கு எந்த பாதிப்பும் ஆகவில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என விமான நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ👇