பாலிவுட் நடிகரான அமீர் கான் நடித்து வெளிய இருக்கும் படம்தான் ‘லால் சிங் சத்தா. இப்படத்தில் அமீர் கானுடன் கரீனா கஃபூர், மோனா சிங் ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும் நாக சைதன்யா அமீர் கானின் நண்பராக பாலிவுட்டில் முதல் முறையாக நடித்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. ஒரு வழியாக இந்த மாதம் 11ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் அமீர் கானுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். பிறகு அவர் விலகியதை அடுத்து நாக சைதன்யா இப்படத்தில் இணைந்தார். விஜய் சேதுபதி ஏன் விலகினார் என பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் நாக சைதன்யா அதற்கு விளக்கம் அளித்துள்ளார். விஜய் சேதுபதி அவர்களுக்கு பல படங்களில் கால்ஷூட் இருந்ததாகவும் அதனால்தான் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறினார்.

மேலும் இப்படத்தை தமிழ் டப்பிங்கை உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், அமீர் கான், நாக சைதன்யா ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் உதயநிதி தொடர்ந்து பேசினார். அதில் அவர் கூறியதாவது “நான் உங்களின் ‘ரங்கீலா’ படத்தை பார்க்க ஸ்கூலை கட் அடித்துள்ளேன்.

மேலும் வாரத்திற்கு 2 படமாவது ரெட் ஜெயண்ட் மூவிஸ்ல வருது. நானும் அவாய்ட் பண்ணலாம்னு பாக்குறேன் முடில. அப்போதான் இந்த படத்த ரிலீஸ் பண்றிங்கள்னு அப்ப்ரோச் பண்ணாங்க. அப்போ ஹிந்தி படம்லாம் வேணாம் சார், தமிழ் படமே போதும்னு சொன்னேன். அப்பறம் அமீர் கான் சார் நேர வீடியோ கால்ல வந்து கேட்டாரு நான் சரினு சொல்லிட்டேன்” இவ்வாறு அவர் கூறினார்.