தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார்.

மேலும் வலிமை படத்தை தயாரித்த போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். படங்களை தவிர மற்ற விஷயங்களிலும் அஜித் குமார் ஆர்வம் காட்டி வருவது வழக்கம். பைக் ரைடு, குக்கிங், ரைபிள் ஷூட்டிங் போன்ற விஷயங்களிலும் மிக ஆர்வமுடையவர் நடிகர் அஜித் குமார். சில நாட்களுக்கு முன்னர் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார்.

இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் படப்பிடிப்பு முடிந்ததும் பைக் ரைடு செல்வது அவருடைய வழக்கம். அதே போல தற்போது லடாக் ட்ரிப் சென்று உள்ளார்.

தனது நண்பர்களோடு நடிகர் அஜித் குமார் லடாக்கிற்கு சென்றுள்ளார். இதில் நடிகை மஞ்சு வாரியர்ரும் கூட சென்று உள்ளார். இங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அஜித் குமாரின் நண்பர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram Embed Code Credits : gideonvasanth