செம்ம ட்விஸ்ட்டா இருக்கு!😃 – அருள்நிதியின் டைரி படம் எப்படி இருக்கு?

தனித்துவமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் அருள்நிதி. இவர் வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பிறகு இவர் நடித்த ‘டிமான்ட்டி காலனி’ , ‘மௌன குரு’ ஆகிய படங்கள் நல்ல ஹிட் ஆனது.

arulnithi
Arulnithi

வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியில் கேள்விக் குறியாகவே உள்ளது. இவர் தற்போது நடித்து வெளிவந்துள்ள படம்தான் ‘டைரி’. இன்னாசி பாண்டியன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை கதிரேசன் தயாரித்து உள்ளார். மேட்டு பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வழியில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் விபத்து நடக்கிறது.

arulnithi

அந்த விபத்துக்காக பல கதைகளை கூறுகின்றனர். இது சம்மந்தமான வழக்குகள் பயிற்சி காவலராக இருக்கும் அருள்நீதியிடம் வருகிறது. அதற்க்கு பிறகு நடக்கும் சம்பவங்கள், திருப்பங்களே மீதி கதை.

arulnithi

இப்படத்தை பார்த்த மக்களிடம் கதை கேட்கும் போது படம் நன்றாக உள்ளது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக உள்ளது, அடுத்த பாதி செம்ம திரில்லிங்காக உள்ளது என கூறியுள்ளனர். நேற்று வெளியான ‘லைகர்’ திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்று இருக்கும் நிலையில் இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Spread the Info

Leave a Comment