நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான ‘கேப்டன்’ திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகி உள்ளது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார். ஆர்யாவுடன் இணைந்து ஐஸ்வர்யா லஷ்மி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், ஆகியோர் நடித்து உள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆர்மி ஆபிஸராக வரும் ஆர்யா, வித்யாசமான மிருகம் என ட்ரைலரே ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கதையை பாப்போம்.

ஒரு குறிப்பிட்ட காட்டுப்பகுதியில் பாதுகாப்பிற்காக இருக்கும் ராணுவ வீரர்கள் ஒவொருவராக இறக்கிறார்கள். அவர்கள் எப்படி இறக்கிறார்கள்? யாரால் இறக்கிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க ஆர்யாவின் குழு வருகிறது. அவர்கள் சென்று யார் காட்டுக்குள் இருக்கிறார்? இருப்பது ஏலியனா? மிருகமா? கடைசியில் ஜெயிப்பது யார்? என்பதே படத்தின் மீதி கதை.

இப்படம் குறித்து மக்களிடம் கருது கேட்கும் போது ” படம் வித்யாசமாக உள்ளது. சலிப்பு தட்டவில்லை. கிராபிக்ஸ் தான் சுமாராக இருந்தது. அதை இன்னும் நன்றாக செய்து இருக்கலாம் என மக்கள் கருது கூறியுள்ளனர்.