நடிகர் ஆர்யா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கேப்டன்’. ஷக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே ‘நாணயம்’, ‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களை இயங்கியுள்ளார்.

மேலும் இது ஆர்யாவை வைத்து இவர் இயக்கும் இரண்டாவது திரைப்படம் ஆகும். இதற்கு முன்னர் ‘டெட்டி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.

ட்ரைலரில் ஆர்யா அவர்கள் மிலிட்டரியில் வேலை செய்வது போல காட்டப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத மிருகம் ஒன்று காட்டில் செல்பவர்கள் எல்லாம் கொல்கிறது. அது என்ன மிருகம்? வேற்று கிரக வாசியா? அதைக் கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை போல தெரிகிறது.

இப்படமானாது வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தின் கதையை பார்த்தால் ஹாலிவுட்டில் அர்னால்ட் அவர்கள் நடித்த ‘ப்ரிடேடர்’ படத்தை போல் உள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ படத்தின் ட்ரைலர்👇