அதர்வா முரளி நடித்து வெளிவர இருக்கும் படம் ‘ட்ரிகர்’. அதர்வா முரளி, தன்யா ரவிச்சந்தர், அருண் பாண்டியன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். இப்படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியானது. க்ரைம் திரில்லர் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதர்வா முரளி ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி இருக்கிறார்.

சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கை தேர்ந்தவர் அதர்வா முரளி. என்னதான் அவரது படங்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியில் கேள்விக் குறியாகவே உள்ளது.

தமிழ் திரை உலகில் ‘பாணா காத்தாடி’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். ‘கணிதன்’, ‘இமைக்க நொடிகள்’, ‘ஈட்டி’ போன்ற சில திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயர் பெற்று தந்தது. ஆனால் பாலா அவர்கள் இயக்கத்தில் இவர் நடித்த ‘பரதேசி’ படம் இவரது கேரியர் பெஸ்ட் படம் என கூறலாம். மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் மகனான இவர் திரைத்துறையில் தனக்கென ஒரு அங்கத்தை பிடிக்க இன்னும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்.

அதர்வா நடித்து கடந்த வாரம் வெளியான ‘குருதி ஆட்டம்’ திரைப்படமானது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் மாபெரும் வெற்றி அடையும் என்று ரசிகர்களால் எதிர் பார்க்கப்படுகிறது.