அதர்வா முரளி நடித்து இந்த மாதம் செப்டம்பர் 23ஆம் தேதி வெளிவர இருக்கும் படம்தான் ‘ட்ரிகர்’. சாம் ஆண்டன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். அதர்வா முரளி, தன்யா ரவிச்சந்தர், அருண் பாண்டியன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர்.

இப்படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் முக்கியமானவர் அதர்வா முரளி. கடந்த மாதம் வெளியான ‘குருதியாட்டம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது அவர் ‘ட்ரிகர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் அதர்வா அண்டர் காப் போலீசாக நடித்து உள்ளார்.

அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளில் அதர்வா கலக்கி உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் விரலை வருகிறது. இதோ ‘ட்ரிகர்’ படத்தின்’ ட்ரைலர்👇