தற்போது அதிமுக அணியானது இரண்டாக பிரிந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றைத் தலைமை சர்ச்சையில் பிரிந்து உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனருமான பாக்கியராஜ் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து உள்ளார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அவர் அதிமுக அணியை எம்.ஜி.ஆர் உருவாக்கினார், பிறகு ஜெயலலிதா வழி நடத்தினர்.
அதற்கு பிறகு செய்தியாளரை சந்தித்த அவர் “ஓ.பி.எஸ் சிறப்பாக கட்சியை நடத்தி வந்தார். தற்போது கட்சி பிளவு பட்டுள்ளது.
நான் கட்சியில் இணைந்து என்னால் முடிந்ததை தொடர்ந்து பணியாற்றுவேன். எல்லாரும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என ஓ.பி.எஸ் கூறுகிறார்.

அவர் கூறுவதை போல தொடர்கள் அனைவரும் சேர்ந்து அதிமுக அணியை நடத்த வேண்டும். முடிந்தால் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சமரசத்தை பற்றி பேசுவேன்” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.