நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ‘கோப்ரா’ திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலி ரவி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும் இப்படத்தின் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராணா இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரோமோஷன் விழா சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளானது. படத்தில் பல்வேறு கெட்டப்களில் சீயான் விக்ரம் கலக்கி இருந்தார்.

சில வேடங்களில் இவர்தான் விக்ரமா? என அடையாளமே தெரியாதபடி அந்த அளவிற்கு கெட்டப்கள் கனகச்சிதமாக இருந்தது. இந்நிலையில் இப்படம் இன்று வெளியாகி உள்ளது.

இப்படத்தின் கதையை பாப்போம் ஸ்காட்லாந்து, இந்தியா மற்றும் நாட்டில் உள்ள முக்கிய புள்ளிகள் கொள்ள படுகின்றனர். அதை கண்டுபிடிக்கும் அதிகாரியாக இர்பான் பதான் வருகிறார். அதே நேரத்தில் ஒரு சாதாரண கணக்கு வாத்தியாராக விக்ரம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த கொலை செய்தது யார்? விக்ரமிற்கும் இந்த கொலைக்கும் என்ன சம்மந்தம்? என்பதே படத்தின் மீதி கதை.

இதைக் குறித்து மக்களிடம் கேட்கும் பொது விக்ரமின் கெட்டப்பிற்கு எந்த குறையும் இல்லை, அருமையாக நடித்து இருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகள் மற்றும் சில இடங்களில் படம் மெதுவாக நகர்வதை போல் இருந்தது. ஆனால் அது அனைத்தையும் விக்ரம் பல கெட்டப் மூலம் தவிடு பொடி ஆகியுள்ளார் என கூறியுள்ளனர்.