அப்போ ‘தல’, இப்போ ‘சீயான்’😃- திருச்சிக்கு வந்த சீயான் விக்ரம்!

நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து இந்த மாதம் 31ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

Chiyaan Vikram

இப்படத்தின் இயக்குனர் ‘டிமான்ட்டி காலனி’, ‘இமைக்க நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தின் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் நெகட்டிவ் ரோலில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இன்று இப்படத்தின் ப்ரோமோஷன் விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் நடிகர் சீயான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Chiyaan Vikram

திருச்சியில் உள்ள சென்ட் ஜோசப்ஸ் கல்லாரியில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்றது. இங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னர் நடிகர் அஜித் குமார் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க திருச்சிக்கு வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the Info

Leave a Comment