நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், மிர்னாலி ரவி ஆகியோர் நடித்து இந்த மாதம் 31ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இயக்குனர் ‘டிமான்ட்டி காலனி’, ‘இமைக்க நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.

மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் விழா திருச்சி அதைத் தொடர்ந்து மதுரையிலும் நடைபெற்றது. இங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதில் நடிகர் சீயான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலி ரவி ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர்.

இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. படத்தில் பல்வேறு கெட்டப்களில் சீயான் விக்ரம் வந்து உள்ளார். சில வேடங்களில் இவர்தான் விக்ரமா? என அடையாளமே தெரியாதபடி அளவிற்கு உள்ளது.

இதற்கு முன் நடிகர் கமலஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்து இருந்தார். அதை இந்த படம் மிஞ்சும் அளவிற்கு ட்ரைலர் மாஸாக உள்ளது.

வரும் 31ஆம் தேதி வெளியுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதோ ட்ரைலர்👇