நடிகர் தனுஷ் நடித்து வெளியாக இருக்கும் படம் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகியோர் இப்படத்தில் நடித்து உள்ளனர். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து உள்ளார்.

சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னரே மித்ரன் ஜவஹர் தனுஷை வைத்து ‘யாரடி நீ மோஹினி’, ‘உத்தம புத்திரன்’, ‘குட்டி’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்து உள்ளதால் படம் நிச்சயம் வெற்றிப்பெறும் என ரசிகர்களால் எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் ‘ப்ளாக் பஸ்டர் காம்போ’ என்று கூறப்படும் தனுஷ்-அனிருத் கூட்டணி இப்படத்தில் இணைந்து உள்ளதால் பாட்டு மற்றும் BGMக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது. இதற்கு முன்னர் இவர்களது கூட்டணியில் உருவான ‘3’, ‘மாரி’, ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களில் உள்ள அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. சில நாட்களுக்கு முன்னர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், செல்வா ராகவன்,அனிருத் ரவிச்சந்தர்,பிரகாஷ் ராஜ், நித்யாமேனன், ராஷி கண்ணா, இயக்குனர் பாரதி ராஜா, தனுஷின் அம்மா மற்றும் அப்பாவான இயக்குனர் கஸ்தூரி ராஜாஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று சன் பிச்சர்ஸ் சமுக வலைதள பக்கதில் நாளை திருச்சிற்றம்பலத்தின் ட்ரைலர் வெளியாகும் என அதிகாரபூர்வமா வெளியிட்டு இருந்தது.

அதன்படி இன்று மாலை இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இந்த டைலரில் டெலிவரி பாயாக வரும் தனுஷ் பாரதி ராஜாவோடு சேர்ந்து அடிக்கும் லூட்டியானது ரசிக்கும்படி உள்ளது. மேலும் ஸ்ட்ரிக்ட் அப்பாவாக பிரகாஷ் ராஜ், தோழியாக நித்ய மேனன் மற்றும் பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா என பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. இந்த மாதம் 18ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் மாபெரும் வெற்றி அடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.