“ஒன்ன மாதிரி அவள பாத்துக்க ஒருத்தன் கெடப்பானாடா?😃” – திருச்சிற்றம்பலம் ப்ரோமோ!

நடிகர் தனுஷ் நடித்து வரும் 18ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘திருச்சிற்றம்பலம்’ . இப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகியோர் இப்படத்தில் நடித்து உள்ளனர். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து உள்ளார்.

dhanush
Dhanush

சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் மித்ரன் ஜவஹர்-தனுஷ் கூட்டணியில் ‘யாரடி நீ மோஹினி’, ‘உத்தம புத்திரன்’, ‘குட்டி’ ஆகிய படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Raashi Khanna

இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்து இருப்பதால் படம் நிச்சயம் வெற்றிப்பெறும் என ரசிகர்களால் எதிர் பார்க்கப்படுகிறது.

nithya-menon
Nithya Menon

மேலும் ‘ப்ளாக் பஸ்டர் காம்போ’ என்று கூறப்படும் தனுஷ்-அனிருத் கூட்டணி இப்படத்தில் இணைந்து உள்ளதால் பாட்டு மற்றும் BGMக்கு நிச்சயம் பஞ்சம் இருக்க வாய்ப்பில்லை. சில நாட்களுக்கு முன்னர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் நடைப்பெற்றது.

dhanush-anirudh
Dhanush – Anirudh Ravichander

இந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், செல்வா ராகவன்,அனிருத் ரவிச்சந்தர், நித்யாமேனன், ராஷி கண்ணா, இயக்குனர் பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், தனுஷின் அம்மா மற்றும் அப்பாவான இயக்குனர் கஸ்தூரி ராஜா மற்றும் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

priya-bhavani-shankar
Priya Bhavani Shankar

இந்நிலையில் படத்தின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. தனுஷின் தோழியாக நித்ய மேனன், காதலியாக பிரியா பவனி ஷங்கர் மற்றும் ராஷி கண்ணா நடித்து உள்ளனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Youtube Video Embed Code Credits : Sun Tv

Spread the Info

Leave a Comment