நடிகர் தனுஷ் நடித்து இருக்கும் திரைப்படமான ‘திருச்சிற்றம்பலம்’ இன்று உலகெங்கும் வெளியானது. இப்படத்தில் தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருக்கிறார். இதற்கு முன்னர் மித்ரன் ஜவஹர் நடிகர் தனுஷை வைத்து ‘யாரடி நீ மோஹினி’, ‘உத்தம புத்திரன்’, ‘குட்டி’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்து உள்ளதால் படம் நிச்சயம் மாபெரும் வெற்றிப்பெறும் என ரசிகர்களால் எதிர் பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக சென்னையில் நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இன்று உலகையெங்கும் வெளியான இப்படத்தின் விமர்சனத்தை பாப்போம். படத்தில் டெலிவெரி பாயாக வருகிறார் நடிகர் தனுஷ். தோழியாக நித்யா மேனன், காதலியாக ராஷி கண்ணா, பிரியா பவனி ஷங்கர், அப்பாவாக பிரகாஷ்ராஜ், லூட்டியடிக்கும் தாதாவாக இயக்குனர் பாரதி ராஜா என ஒரு நல்ல கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம்.

ஒரு தரப்பினர் இப்படம் வேலையில்லா பட்டதாரி படத்தை போன்று உள்ளது என கூறுகின்றனர். இனொரு தரப்பினர் படம் சுமாராகவே உள்ளது என பகிர்ந்து உள்ளனர். படம் இதுவரை கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.