நடிகர் தனுஷ் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் படம் ‘திருச்சிற்றம்பலம்’ . இப்படத்தில் தனுஷ், நித்ய மேனன், ராஷி கன்னா, பிரியா பவனி ஷங்கர், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகியோர் நடித்து உள்ளனர்.

இதைத் தொடர்ந்து தனுஷ் அவர்கள் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனரான வெங்கி அல்த்தூரி இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். தனுஷ், சம்யுக்த மேனன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் அவரக்ளின் ‘நானே வருவேன்’ படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. செல்வராகவன் இயக்கவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்க உள்ளார். மேலும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார்.

இப்படத்தில் தனுஷ், செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தனது சமூக வலைதள பக்கத்தில் இப்படத்தின் புதிய போஸ்டர்களை பகிர்ந்து உள்ளார்.

இதில் நடிகர் தனுஷ் வித்யாசமான வேடத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. தற்போது இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.