தற்போது கெளதம் கார்த்திக் நடித்துள்ள திரைப்படம் ‘1947ஆகஸ்ட்-16’. என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ள இப்படத்தை ஓம் பிரகாஷ் பாட், நர்ஸரிரம் சவுத்திரி உடன் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார்.

கெளதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். முதல் படம் மணிரத்னம் இயக்கியதால் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’ மற்றும் ‘வை ராஜா வை’ திரைப்படம் ஓகே என்ற அளவிலேயே இருந்தது. அதற்கு பிறகு வெளியான எந்த படமும் கை கொடுக்கவில்லை.

அதன் பிறகு அடல்ட் காமெடி படங்களில் நடித்ததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும் இவர் நடித்த ‘முத்துராமலிங்கம்’ மற்றும் ‘தேவராட்டம்’ ஆகிய படங்களை நெட்டிசன்கள் மரணமாக கலாய்த்தனர். பிறகு தனது அப்பாவோடு சேர்ந்து ‘சந்த்ரமௌலி’ படமும் பிளாப் ஆனது. தற்போது ‘1947ஆகஸ்ட்-16’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதையானது சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களிடம் இந்தியாவைச் சேர்ந்த கிராமம் எப்படி கொடுமை படுத்தப்பட்டது மற்றும் அதில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உள்ளது. இப்படத்தில் கௌதம் கார்த்திக்கோடு அறிமுக கதாநாயகியாக ரேவதி மற்றும் விஜய் டிவி புகழ் நடிக்கின்றனர்.

இப்படம் இவருக்கு கம் பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு’தனது ட்விட்டர் பக்கத்தின் மூலமாக வெளியிட்டு உள்ளார்.