நடிகர் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்து 2017ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்திரி இயக்கிய இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து இருந்தார். 2017ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோர் சரிக்கு சமமாக நடித்து இருப்பார்கள். ‘good vs evil’ என்ற மையக் கதையை கொண்டு இப்படம் அமைந்து இருக்கும். அதாவது நல்லவனுக்கு, தீயவனுக்கும் இடையே நடக்கும் போட்டி, சண்டை, ரத்தம் என்ற கதை களத்தில் இப்படம் அமைந்து இருக்கும். நடுவில் நடக்கும் சுவாரசியங்கள், நட்பு, துரோகம் இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

ஹீரோவாக வரும் மாதவன் மற்றும் வில்லனாக வரும் விஜய் சேதுபதியையும் சரி சமமாக இப்படத்தில் காட்டப்பட்டதால் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியானது.

தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. மேலும் அதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ரித்திக் ரோஷனும் மாதவனுக்கு பதிலாக சைப் அலி கானும் நடித்து உள்ளனர். இந்த படத்தையும் தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்திரி ஆகியோரே இணைந்து இயக்கி உள்ளனர்.

மாஸாக ரித்திக் ரோஷனும் கிளஸ்ஸாக சைப் அலி காணும் நடித்து உள்ளனர். தற்போது இந்த ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ட்ரைலர்👇