நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வந்து கொண்டு இருக்கிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கம் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் அவர்கள் கடைசியாக நடித்த படமான ‘அண்ணாத்தே’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்களிடம் பெறவில்லை.

அதே போல நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ திரைப்படமும் கலவையான விமர்சங்களையே பெற்றது. இதனால் ‘ஜெயிலர்’ படமானது இருவருக்கும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தின் புதிய போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இது இணையத்தில் வைரலானது.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி. விநாயகன் ஆகியோர் நடிக்க உள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. பிறகு இப்படத்தில் சிவாகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் இதைப்பற்றி படக்குழுவும், சிவகார்த்திகேயனும் ஏதும் சொல்லவில்லை.

தற்போது சிவகார்த்திகேயன் ரோலில் பிரபல நடிகர் ‘ஜெய்’ நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் விஜய் நடித்த ‘பகவதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு ‘சென்னை-28’, ‘கோவா’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.