மீண்டும் சேனாபதி!😎 – இந்தியன்-2 பட ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது!

உலக நாயகன் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ படம் பிளாக் பஸ்டர் வெற்றி அடைந்ததை அடுத்து இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. அது தற்போது உறுதியாகி உள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

indian-2
Indian 2

இப்படத்தின் முதல் பாகம் 1996ஆம் ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது. லஞ்சத்தை எதிர்த்து போராடும் அப்பா மற்றும் லஞ்சம் வாங்கும் மகன் என கமலஹாசன் இரு வேடங்களில் கலக்கி இருந்தார்.

indian-2
Indian 2

இதைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகம் 26 ஆண்டுகள் கழித்து தொடங்க உள்ளது. படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் கிரேன் விபத்து ஏற்பட்டு 3 பேர் பரிதாபமாக இறந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

indian-2-pooja
Indian-2 Pooja

மேலும் கொரோனா ஊரடங்கு, தயாரிப்பு நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு போன்ற காரணத்தால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் ஷங்கர், நடிகர் பாபி சிம்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர். கமலஹாசன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

indian2

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் ரெட் ஜெயண்ட் மூவி இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Spread the Info

Leave a Comment