கமலஹாசன் தனது சிறு வயதிலேயே சினிமா துறைக்கு வந்து விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. 1960ஆம் ஆண்டு வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அதில் வரும் “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” பாட்டை யாராலும் மறக்க முடியாது.

அதன் பிறகு ‘பார்த்தாலே பசி தீரும்’, ‘பாத காணிக்கை’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதற்கு பிறகு ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு பல படங்களில் நடித்து இருந்தார். ரசிகர்களால் ‘உலக நாயகன்’. ‘ஆண்டவர்’ என்று அவர் அழைக்கப்பட்டாலும் அது மிகையாகாது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கும் திறமை உடையவர்.

நகைச்சுவைக்கு ‘அவ்வை ஷண்முகி’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா MBBS”, நடிப்புக்கு ‘மூன்றாம் பிறை’, ‘தேவர் மகன்’, ‘அன்பே சிவம்’, ‘தசாவதாரம்’ ஆகிய படங்களை கூறினாலும் அவர் கூறுவது போல “பத்தல பத்தல” என்று தன கூற வேண்டும். ரக ரகமாக நடிப்பததால் தான் இவர் தமிழ் சினிமாவின் ஆண்டவராக கருதப்படுகிறார்.

கடைசியா இவர் நடித்து வெளிவந்த ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இவர் இதுவரை நடித்த படங்களிலேயே இந்த படம்தான் அதிக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு இவரே தயாரிப்பாளர் என்பதால் டபுள் ஜாக்பாட் அடித்தது.

தற்போது இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது 1970களில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். தன் சக நண்பர்களோடு சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

