எவ அவ! எவ அவ! எவ அவ!😅 – கார்த்தி உடன் கபடி ஆடிய அதீதி ஷங்கர்!

நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ஆர்.கே. சுரேஷ்,ராஜ்கிரன், சூரி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் ‘விருமன்’. இப்படமானது தற்போது வெற்றிகரமாக திரை அரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது. முத்தையா இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். மேலும் இப்படத்தை தனது அண்ணனின் நிறுவனமான 2D என்டர்டைமென்ட் தயாரித்து உள்ளது.

Karthi Suriya

மேலும் இப்படத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் அதீதி ஷங்கரின் நடிப்பு மற்றும் நடனம் சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் பலர் கூறி இருந்தனர். மேலும் இவர் தனது சொந்த குரலில் பாடிய ‘மதுர வீரன்’ பாட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக உள்ளது.

viruman
Viruman

முதல் படத்திலேயே ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்து விட்டார் அதீதி ஷங்கர். மேலும் இவர்தான் லேட்டஸ்ட் க்ரஷ் என்று அவருடைய ரசிகர்கள்கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.

karthi
Karthi

படம் வெளியாகி 5 நாளே ஆன நிலையில் இந்த வெற்றிவிழா நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் நடிகர் கார்த்தி, சூர்யா, அதீதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், வடிவுக்கரசி, ராஜ்கீரன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.

aditi-shankar-karthi

இவ்விழாவின் இறுதியில் ஒரு விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதில் நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், இந்திராஜா ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். குறிப்பாக அங்கு நடிகர் கார்த்தி அதீதி ஷங்கரோடு கபடி விளையாடுவது போல இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ

YouTube Video Embed Code Credits: Cinema Vikatan
Spread the Info

Leave a Comment