பருத்தி வீரனை beat செய்ததா ‘விருமன்’?🤜🤛 – மக்கள் கருத்து என்ன?

நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, ராஜ்கிரன், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் ‘விருமன்’. முத்தையா இயக்கத்து யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படம் இன்று உலகெங்கும் உள்ள திரை அரங்குகளில் வெளியானது.

இப்படத்தின் இயக்குனர் இதற்கு முன்னனரே நடிகர் கார்த்தியை வைத்து கிராமத்து பாணியில் உருவான ‘கொம்பன்’ படத்தை இயக்கி இருந்தார். தற்போது விருமன் படமும் கிராமத்து கதையை மையமாக கொண்டு உருவாகி வெளிவந்துள்ளது.

இப்படத்தை தனது அண்ணனின் நிறுவனமான 2D என்டர்டைமென்ட்டில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக முதல் முதலாக அறிமுகம் ஆகியுள்ள அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார்.

இப்படத்தின் ‘கஞ்சா பூவு கண்ணாலே’ பாட்டு மற்றும் ‘மதுர வீரன்’ பாடலும் நல்ல வைரலானது. இப்போது இப்படத்தின் விமர்சனத்தை பாப்போம். முத்தையாவின் வழக்கமான கிராமத்து பாணியில் இப்படத்தின் கதை அமைந்து உள்ளது.

Thanks to: Kaushik LM

கார்த்தியின் கிராமத்து பேச்சு, அதிதியின் எதார்த்தமான நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள், செண்டிமெண்ட் என பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது விருமன் படம். விறுவிறுப்பான திரைக்கதை, வசனங்கள் என அனைத்து ரசிகர்களையும் கவரும் படி இப்படம் அமைந்து உள்ளது.

Thanks to: Christopher Kanagaraj

படத்தை பார்த்த பலர் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் அதிதியின் நடிப்பு நன்றாக இருந்ததாக பலர் கூறி. வருகினற்னர்.

Thanks to: Zaro

Spread the Info

Leave a Comment