நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரன், பிரகாஷ் ராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்து நாளை 12ஆம் தேதி வெளிவர இருக்கும் படம் ‘விருமன்’. முத்தையா இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். இப்படத்தின் இயக்குனர் முத்தையா ஏற்கனவே நடிகர் கார்த்தியை வைத்து கிராமத்து கதையில் உருவான ‘கொம்பன்’ படத்தை இயக்கி இருந்தார். தற்போது விருமான் படமும் கிராமத்து கதைகளம் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளதால் படம் மாபெரும் வெற்றி அடையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்து உள்ளனர். மேலும் இப்படத்தில் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ‘கஞ்சா பூவு கண்ணாலே’ பாட்டு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் மற்றுமொரு பாட்டான ‘மதுர வீரன்’ பாடலும் வைரலானது. இப்பாடலை அத்தி ஷங்கர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ப்ரோமோவில் மேளதாளத்தோடு வரும் கார்த்தி தனது அப்பாவான பிரகாஷ் ராஜ் முன்னிலையில் நடிகர் ஆர்.கே. சுரேஷிற்கு மோதிரம் போடுகிறார்.

உடனே கார்த்தி “என்னணே சாக்காயி நிக்கிறே நீ அடிச்சேலே தாசில்தார் எங்க அப்பேன் தான். நான் செய்யாதத நீ செஞ்சிபுட்டெணே” என கூறுகிறார். இதிலிருந்து தனது அப்பாவான பிரகாஷ் ராஜ்தான் எதிரி போல கதை உள்ளது.

மேலும் கிராமத்து பாஷயை கார்த்திக்கு சொல்லி தர வேண்டியது இல்லை. மொத்தத்தில் இப்படம் பருத்திவீரன், கொம்பன் படத்திற்கு இணை அல்லது அதற்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.