நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், சூரி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்து தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் படம் ‘விருமன்’. முத்தையா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார்.

இப்படத்தை 2D என்டர்டைமென்டான சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்து உள்ளனர். மேலும் இப்படத்தில் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் நடிப்பு மற்றும் நடனம் அருமையாக இருந்ததாக ரசிகர்கள் பலர் கூறி இருந்தனர். மேலும் இவர் தனது சொந்த குரலில் பாடிய ‘மதுர வீரன்’ பாட்டு தற்போது வைரலாகி வருகிறது. அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரையும் தன் பக்கம் இழுத்து விட்டார் அதீதி ஷங்கர்.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. படம் வெளியான 5ஆம் நாளே இந்த வெற்றிவிழா நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் நடிகர் கார்த்தி, சூர்யா, அதீதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கீரன், வடிவுக்கரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.