நேற்று ‘விருமன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள முத்தையா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, கார்த்தி, சூரி, அதிதி ஷங்கர், இயக்குனர் பாரதி ராஜா மற்றும் ஷங்கர் ஆகியோ கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா இந்த படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறினார். மேலும் சூர்யாவை வைத்து அஞ்சான் படத்திலும், கார்த்தியை வைத்து பிரியாணி படத்திலும் நான் பாட வைத்தேன் என கூறினார்.

அதைத் தொடந்து பேசிய கார்த்தி நான் நடித்த ‘பருத்தி வீரன்’ படமானது எனக்கு கிடைத்த அன்பு பரிசு. மேலும் அந்த பரிசு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை . மேலும் கிராமத்து படங்கள் மிகவும் முக்கியமானது என பலர் கூறியுள்ளனர். அம்மா, அப்பா குடும்பத்தோடு வாழ்வது தனி சுகம்தான். கிராமத்து படங்களை நடிக்க தனக்கு ஆசை இருப்பதாகவும் மேலும் குடும்பத்தில் அப்பா தான் வில்லன் எனவும் கூறினார்.

மேலும் முதல் மரியாதை படத்தை முந்துவதற்கு ஒரு படம் பண்ண வேண்டும் என இயக்குனர் முத்தையாவிடம் நான் கேட்டிருந்தேன். மேலும் சினிமா துறைக்கு பெண்களை அனுப்புவது மிக பெரிய விஷயம். எங்க வீட்டில் அப்பா என்னை நடிக்கக் கூடாது என கூறினார். கிராமத்து கதையை சார்ந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவை விடக் கூடாது எனவே அவரை பிடித்தோம் என கூறினார்

இவ்வாறு அவர் தொடந்து பேசினார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. கிராமத்து கதையில் அனல் பறக்க கார்த்தி நடித்து உள்ளார் என கூறலாம். மேலும் இதில் உள்ள காட்சிகள் அனைத்தும் ‘கடைக்குட்டி சிங்கம்’ , ‘பருத்தி வீரன்’ போன்று உள்ளதால் மாபெரும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.