‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள முத்தையா மண்டபத்தில் நடைபெற்றது. நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரன், பிரகாஷ் ராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் நடித்து உள்ளனர். முத்தையா இயக்கி, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து உள்ள இப்படமானது ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, இயக்குனர் முத்தையா, நடிகர் கருணாஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா தொடர்ந்து பேசினார். நடிகர் கார்த்தி இவ்விழாவில் தொடர்ந்து பேசினார்.

அதில் அவர் கூறியதாவது நான் நடித்த ‘பருத்தி வீரன்’ படமானது எனக்கு கிடைத்த அன்பு பரிசு. மேலும் எத்தனை பேருக்கு அது கிடைக்கும் என்று தெரியவில்லை. மேலும் கிராமத்து படங்கள் மிகவும் முக்கியம் என பலர் கூறியுள்ளனர். அம்மா, அப்பா குடும்பத்தோடு வாழ்வது தனி சுகம். கிராமத்து படங்களை நடிக்க தனக்கு ஆசை இருப்பதாகவும் மேலும் அப்பா தான் வில்லன் எனவும் கூறினார். மேலும் பாரதி ராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தை முந்துவதற்கு ஒரு படம் பண்ண வேண்டும் என இயக்குனர் முத்தையாவிடம் நான் கேட்டேன், மேலும் சினிமா துறைக்கு பெண்களை அனுப்புவது பெரிய விஷயம். எங்க வீட்டில் அப்பா என்னை நடிக்கக் கூடாது என கூறினார்.

கிராமத்து கதையை சார்ந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவை விடக் கூடாது எனவே அவரை பிடித்தோம் என கூறினார். விமானத்தில் நானும் அண்ணாவும் வரும் போது அண்ணாவிடம் ஏன் இந்த படத்தைத் ஏன் தயாரித்தீர்கள் என்று கேட்டேன் உன்மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார். மேலும் இந்த படமானது நன்றாக வரவேண்டும் என பயமாக இருந்தது என கூறினார். மேலும் இப்படமானது மிக பெரிய வெற்றி படமாக அமையும் என கூறினார்.
