இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். முதல் படமே நல்ல வரவேப்பை பெற்று அனைவராலும் கொண்டாடபட்டது. இருந்தாலும் அவருக்கு தனி அடையாளத்தை கொடுத்த படம் கார்த்தி நடித்த ‘கைதி’தான். படத்தில் கதாநாயகி, பாட்டு என ஏதும் இல்லாமல் படம் மாபெரும் ஹிட் அடித்தது.

அதைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இரண்டு முன்னனி நடிகர்களை வைத்து இயக்கி இருந்த இப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னால் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கடைசியாக எடுத்த ‘விக்ரம்’ படத்தை பத்தி சொல்லவே வேணாம். கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா என 4 மாபெரும் நடிகர்களை வைத்து இயக்கி இருந்தார் லோகேஷ். இப்படத்தை தொடர்ந்து விக்ரம்-2 எப்போது வரும் என்று கேள்வி எழுப்ப பட்டிருந்தது. ஆனால் தனது அடுத்த படத்தை நடிகர் விஜய்யை வைத்து எடுக்க இயக்குவதாக கூறினார்.

தளபதி -67, விக்ரம்-2, கைதி-2 என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது லோகியின் மல்டி யூனிவெர்ஸ். இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் கைதி-2வில் கார்த்தியின் கதாபாத்திரத்தை வெளிப்படையாக கூறினார் லோகேஷ் கனகராஜ். இரண்டாம் பாகத்தில் கார்த்தி கபடி வீரராக வருவார் என கூறி இருந்தார். நடிகர் கார்த்தியின் ‘விருமன்’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் கைதி-2 எப்போது வரும் என கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு கார்த்தி தளபதி-67 படத்திற்கு பிறகு தொடங்கும் என கூறினார். மேலும் கைதி-2 தான் விக்ரமின் இரண்டாம் பாகமா? அதில் தில்லி vs ரோலெக்ஸ் ஆ? இல்லை தில்லி vs விக்ரம் ஆ? இல்லை விக்ரம் vs ரோலெக்ஸ் ஆ? என குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். லோகி யூனிவெர்ஸ் என ரசிகர்களால் அழைக்கப்படும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கதை எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
