சமந்தாவை பார்த்தால் என்ன பண்ணுவீங்க? – இதான் பண்ணுவேன்! – நாக சைதன்யா சொன்ன நச் பதில்!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ படம் மூலம் அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு ‘நான் ஈ”, “நீதானே ஏன் பொன் வசந்தம்” போன்ற படங்கள் நல்ல வரவேற்பை தந்தது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து டாப் ஹீரோயின் ஆனார்.

samantha
Samantha

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கலக்கி வருகிறார். கடைசியாக ‘புஷ்பா’ திரைப்படத்தில் இவர் ஆடிய “ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா” பாட்டு சக்கை போடு போட்டது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மீது காதல் வந்தது.

samantha
Samantha

காதலித்து வந்த இவர் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்கள் விவாகரத்து குறித்து பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணத்தை இருவரும் சொல்லவில்லை. தற்போது பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியான “லால் சிங்க் சத்தா” படத்தில் அவரது நண்பராக நாக சைதன்யா நடித்து உள்ளார்.

samantha-Naga-chaitanya
Samantha – Naga Chaitanya

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நாகா சைதன்யா கலந்து கொண்டார். அதில் நீங்கள் இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஹாய் சொல்லிவிட்டு கட்டிப்பிடிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் கையில் உள்ள டாட்டுவை பற்றி கேட்கும் போது இது எங்களின் திருமண நாள் ஏன் கூறியுள்ளார். மேலும் இந்த டாட்டுவை எனது ரசிகர்களை நிறைய பேர் கையில் வரைந்து உள்ளனர். அதை யாரும் வரைய வேண்டாம் என கூறி உள்ளார்.

samantha-Naga-chaitanya
Samantha – Naga Chaitanya
Spread the Info

Leave a Comment