நடிகர் விஜய் தற்போது தனது 66ம் படமான ‘வாரிசு’ படத்தில் பிஸியாகி நடித்துக் கொண்டு இருக்கிறார். வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். ரஷ்மிக்கா மந்தனா, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, சரத் குமார், பிரபு ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்க உள்ளார். விஜயின் 67வது படத்தின் அப்டேட்கள் அடிக்கடி வருவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு முன்னர் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் இணைந்து ‘கில்லி’, ‘திருப்பாச்சி’ , ‘ஆதி’ மற்றும் ‘குருவி’ ஆகிய படங்களில் நடித்து உள்ளனர். மேலும் இப்படத்தில் வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதைத் தொடர்ந்து தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் இப்படத்தில் 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 6 மொழிகளிலும் இருந்து ஒவ்வொரு வில்லன்களையும் தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் மலையாளத்தில் பிரிதிவிராஜ் மற்றும் இந்தியில் சஞ்சய் டுட் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதைத் தொடர்ந்து தெலுங்கில் பிரபல நடிகர் நாகர்ஜூனாவை நடிக்க வைக்க போவதாக பேசப்பட்டு வருகிறது. பல மொழிகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் இணைய உள்ளதால் விஜயின் 67வது படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
