நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல்நலக் குறைவால் காலமானார். 70 வயதாகும் பிரதாப் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அழியாத கோலங்கள் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, மை டியர் மார்த்தாண்டம், சீவலபேரிப்பாண்டி போன்ற படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் பல flimfare அவார்ட்களையும் வாங்கியுள்ளார். குணசித்ர வேடங்களில் நடிக்கும் இவர் மூடு பனி படத்தில் உள்ள “என் இனிய பொன்நிலாவே” பாடல் ரசிகர்களால் மறக்க முடியாதது. இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவர் வீட்டில் காலமானார்.
