தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் மணிரத்னம். இவரின் நெடுநாள் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம்-1 படம் வருகின்ற செப்டம்பர்-30ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, சரத்குமார், பிரபு, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். வழக்கம் போல ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசைமைத்து உள்ளார்.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் டீஸர் ஜூலை-9 அன்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் அவர்கள் உடல் நிலை சரி இல்லாததால் கலந்து கொள்ளவில்லை. இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும்.

சிறிது நாட்களுக்கு முன்னர் காரிகலனாக நடிக்கும் விக்ரம் தான் dubbing செய்த விடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தனர். மாஸாக டப்பிங் பேசிய சீயான் விக்ரமின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. பிறகு ஏ.ஆர். ரகுமான் அவர்கள் டிரம்ஸ் சிவமணியுடன் சேர்ந்து ‘பொன்னி நதி’ பாடலை உருவாக்கிய வீடியோ ஒன்று வெளியானது.

தற்போது சூப்பரான செய்தி ஒன்று ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவிடம் இருந்து வெளியாகி உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இவ்விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஒரே மேடையில் தோன்ற உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.