நட்சத்திரம் நகர்கிறது படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!😍 – பா.ரஞ்சித் ட்வீட்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் வெற்றிகரமாக திரைப்படங்களில் ஓடி கொண்டு இருக்குறது. இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷார விஜயன், கலையரசன் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். பா.ரஞ்சித்தின் படம் என்றாலே கதை வித்தியாசமாகத்தான் இருக்கும்.

kalidas-jayaram-dushara-vijayan
Natchathiram Nagargirathu

வழக்கம் போல இப்படமும் வித்யாசமான கதை களத்தில் அமைந்து உள்ளது. ‘முற்போக்குத்தனம்’ , ‘ஆணாதிக்கம்’, ‘நாடக காதல்’, ‘LGBT’ ஆகியவற்றை பற்றி இப்படத்தின் விரிவாக கூறப்பட்டு உள்ளது. மேலும் காதலில் ஜாதி, மதம், அரசியல் ஆகியவை கலக்க கூடாது, இருவருக்கு பிடித்து இருந்தால் அவர்களது இஷ்டம் போல வாழலாம் என்ற கருத்தை கூறியுள்ளார் இயக்குனர் ப.ரஞ்சித்.

kalidas-jayaram-dushara-vijayan
Natchathiram Nagargirathu

இப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தன் பாராட்டை தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது “நீங்கள் இயக்கிய படங்களில் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது படம்தான். இதில் நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை, கலை என அனைத்தும் சிறப்பாக உள்ளது” என கூறியுள்ளார்.

rajinikanth
Rajinikanth

மேலும் படக்குழுவிற்கும் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதனை பா.ரஞ்சித் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதில் நட்சத்திரம் நகர்கிறது படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் பாராட்டியது என்னை மிகவும் கவர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.

Spread the Info

Leave a Comment