நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க உள்ளார். நெல்சன் திலிப் குமார் இயக்கதில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் 3வது முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகிய முன்னணி கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நாட்டின் 75வது சுதந்திர தின விழா வரவுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி அனைவரும் தங்களது வீட்டில் தேசியக்கொடி ஏற்றுமாறு கேட்டுக் கொண்டார். ஒன்றிய அரசானது ‘இல்லந்தோறும் தேசியக்கொடி’ என்ற திட்டத்தை அறிமுக படுத்தியுள்ளது. இதன் படி ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைவரும் தங்களது வீட்டில் தேசியக்கொடி ஏற்றுமாறு கேட்டுக்கொண்டது.

மேலும் அனைவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் தேசியக்கொடியை DPயாக வைக்குமாறு வலியுறுத்தியது. இந்த அழைப்பை ஏற்று பாஜக தொடர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் சமூக வலை தள பக்கங்களில் தேசிய கொடியை மாற்றி உள்ளனர்.

இந்த அழைப்பை நடிகர் ரஜினிகாந்தும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தின் DPயில் தேசிய கொடியை வைத்து உள்ளார். இதனை அவரது ரசிகர்களை பலர் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.