நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் புதிய போஸ்டர் கடந்த 22ஆம் தேதி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பானது விரைவில் தொடங்க உள்ளது. மேலும் ‘பேட்ட’ மற்றும் ‘தர்பார்’ படங்களுக்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர் 3வது முறையாக ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் நடிக்க உள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் அதிகாரபூர்வாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
The cast of #Jailer💥
— Sun Pictures (@sunpictures) August 24, 2022
Welcome on board @meramyakrishnan @iYogiBabu @iamvasanthravi #Vinayakan@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/Umo5DevjWy
Twitter Embed Code Credits: Sun Pictures
மேலும் ரஜினிகாந்த் அவர்கள் கடைசியாக நடித்த ‘அண்ணாதே’ திரைப்படம் எதிர்பாராத அளவிற்கு வரவேற்பை பெறாததால் இப்படம் மிகவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படத்தின் இயக்குனர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் கார்த்தி சுப்ராஜ் தான் அடுத்த படத்தின் இயக்குனர் என்ற தகவல் வெளியானது. இதைக் குறித்து அவரிடம் கேட்கையில் அதை மறுத்து விட்டார். தற்போது அடுத்த படத்தின் இயக்குனர் சி.பி. சக்கரவர்த்தி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இவர் கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கி இருந்தார். அப்படமானது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இவர்தான் ரஜினிகாந்த் அவரகள் அடுத்த படத்திற்கு இயக்குனர் என கூறப்படுகிறது .