நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாத்துறைக்கு வந்து 47வருடத்தை நிறைவு செய்து உள்ளார். நேற்றைய தினம் 75வது சுதந்திர தினம் நாடு முழுதும் கொண்டாடபட்டது. அதே நேரத்தில் தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் என கருதப்படும் ரஜினிகாந்த் அவர்களும் சினிமா துறைக்கு வந்து 47 வருடத்தை நிறைவு செய்துள்ளார்.

இதை கொண்டாடும் வகையில் நேற்றைய தினம் ரஜினிகாந்த் அவர்களின் முதல் மகளான ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அப்பாவிற்கு கொடி குத்தி விடுவது போல புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
அதில் எங்கள் அன்பான ஜில்லுமா, அப்பாவுடைய மிக தீவிர விசிறி மற்றும் எங்கள் குடும்பத்தின் சூப்பர்ஸ்டார் என பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் இதை “47years of rajinism” என்ற ஹாஷ்டேகை டிரண்ட் செய்து வருகின்றனர்.