நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் போஸ்டர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் ‘பேட்ட’ மற்றும் ‘தர்பார்’ படங்களுக்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர் ‘ஜெயிலர்’ படத்திற்கு மூன்றாவது முறையாக இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தில் யார் நடிக்கிறார்? என்ற அப்டேட் வெளியாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அது அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்க உள்ளனர்.

வசந்த் ரவி இதற்கு முன்னர் ராம் இயக்கிய தரமணி படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அப்டேட்கள் அடிக்கடி வருவதால் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.