நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் ‘பேட்ட’ மற்றும் ‘தர்பார்’ படங்களுக்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர் 3வது முறையாக ‘ஜெயிலர்’ படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய தினம் இரவு 11மணிக்கு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் போஸ்டர் ஒன்று வெளியிட்டு இருந்தது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நிழல் போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது.
அதில் இன்றைய தினமான 22-08-2022 11AM என குறிப்பிட்டுள்ளது. இது என்னவாக இருக்கும்? படப்பிடிப்பு ஆரம்பிக்கப் போகுதா? இல்லை படத்தின் பூஜையா? என ரசிகர்கள் குழம்பி போய் இருந்தனர்.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போஸ்டரின் அப்டேட் இன்று காலை 11மணிக்கு வெளியானது. ‘ஜெயிலர், படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாகி வருகின்றனர்.