நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக் மற்றும் பல நடித்து வெளிவந்த படம் ‘சிவாஜி’. ஷங்கர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த இப்படமானது மாபெரும் வெற்றி அடைந்தது. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளிடம் சிக்கிய ரஜினிகாந்த் அதற்கு பிறகு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு எவ்வாறு உதவுகிறார் என்பது தான் படத்தின் மீதி கதை.

சுவாரசியமான கதையை கொண்டு இயக்குனர் ஷங்கர் வழக்கம் போல் பிரமாண்டமாக இயக்கிருப்பர் ஷங்கர். படம் மட்டுமில்லாமல் அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை தயாரித்த நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பாளர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சரியான கதை அமைந்தால் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளதால் இந்த படத்திற்கு பிறகு நடிப்பாரா? மேலும் இப்படத்தின் இயக்குனர் யார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் சிவாஜி-2 படத்திற்கு வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.