நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க உள்ளார். நெல்சன் திலிப் குமார் இயக்கதில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது இந்த மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். ரஷ்மிக்கா மந்தனா, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, பிரபு, சரத் குமார், ஷாம் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது நாட்டின் 75வது சுதந்திர தின விழா வர இருக்கிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி அனைவரும் தங்களது வீட்டில் தேசியக்கொடி ஏற்றுமாறு கேட்டுக் கொண்டு இருந்தார். ஒன்றிய அரசானது ‘இல்லந்தோறும் தேசியக்கொடி’ என்ற திட்டத்தை அறிமுகபடுத்தி இருந்தது. இதன் படி இந்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாட்டில் உள்ள அனைவரும் தங்களது வீட்டில் தேசியக்கொடி ஏற்றுமாறு கேட்டுக்கொண்டது. மேலும் நரேந்திர மோடி அனைவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் தேசியக்கொடியை DPயாக வைக்குமாறு வலியுறுத்தினார்.

இந்த அழைப்பை ஏற்று பாஜக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் சமூக வலை தள பக்கங்களில் தேசிய கொடியை மாற்றி உள்ளனர். இந்த அழைப்பை ஏற்று பிரபலங்கள் பாராளும் தங்களது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் DPயை தேசிய கோடியாக மாற்றி இருந்தார்.

மேலும் சுதந்திர தினம் சார்ந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் மற்றும் எம்.எஸ். தோனி இருவரும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
