சேனாபதியுடன் இணையும் கட்டப்பா!😀 – காம்போ வேற லெவல்!👌 -இந்தியன்-2 அப்டேட்!

உலக நாயகன் கமலஹாசன் கடைசியாக நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பிக்க உள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு முதல் முறையாக அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் பாகம் 1996ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. லஞ்சத்திற்கு எதிராக போராடும் அப்பா மற்றும் லஞ்சம் வாங்கும் மகன் என கமல் இரு வேடங்களில் கலக்கி இருப்பார்.

indian2
Indian-2

இதைத் தொடந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 26 ஆண்டுகள் கழித்து தொடங்க உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி இருந்தது. பின்பு அதற்கு பின் ஏற்பட்ட கிரேன் விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு, தயாரிப்பு நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு போன்ற காரணத்தால் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருந்தது.

indian2

அதன் பிறகு கமலஹாசன் விக்ரம் படத்தில் இறங்கி விட்டார். சில தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என தகவல்கள் வெளியானது. சில நாட்களுக்கு முன்னர் இந்தியன்-2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதள பக்கங்களில் வரும் மாதம் செப்டம்பர் 13ஆம் தேதியன்று சூட்டிங் தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக கூறி வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார்.

actor-karthick
Actor Karthick

இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் நவரச நடிகன் கார்த்திக் இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. முக்கியமான கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. அதைப்போலவே நடிகர் சத்யராஜும் இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

kamalhaasan-sathyaraj
Kamalhaasan – Sathyaraj

இதற்கு முன்னர் நடிகர் கமலஹாசனும் சத்யராஜும் இணைந்து ‘மங்கம்மா சபதம்’ , ‘ஜப்பானில் கல்யாணராமன்’, ‘காக்கி சட்டை’, ‘விக்ரம்’ ஆகிய படத்தில் நடித்து உள்ளனர். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இணைய உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

sathyaraj-kamalhaasan
Sathyaraj Kamalhaasan
Spread the Info

Leave a Comment