செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அழகாக😍பாட்டு பாடிய பிரபல நடிகரின் மகள்! – அட இவர் மகளா?😃

சென்னையின் மாமல்லபுரத்தில் நடைப்பெற்ற வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இனிதே நிறைவு பெற்றது. சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நிறைவு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்போட்டியின் தொடக்க விழா கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி மிக கோலாகலமாக துவங்கியது. மேலும் தமிழ்நாட்டின் பல பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. மேலும் இந்தியாவில் இந்த தொடர் முதல் முறையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

chess-olympiad

இத்தொடரில் மொத்தம் 187 நாடுகளைச் சேர்ந்த 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் இறுதி விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மெய்ய நாதன். செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்க் தோனி கலந்து கொள்ள இருந்த நிலையில் சில காரணங்களால் அவர் கலந்து கொள்ளவில்லை. மேலும் ஜிம்னாஸ்டிக், கபடி, பரதநாட்டியம், சுதந்திரம் சார்ந்த கலை நிகழ்ச்சி மற்றும் அந்தரத்தில் பறந்துகொண்டே பியானோ வாசித்த கலைஞர் என பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Chief Minister M.K. Stalin

இந்த நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கோர்ட் ஷூட்டுடன் கலந்து கொண்டார். இப்போட்டியின் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் டிரம்ஸ் மணியுடன் சேர்ந்து டிரம்ஸ் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் பதக்கங்களை வழங்கினார்.

YouTube Video Embed Code Credits: Kalaingar TV News

இந்த நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா குழுவுடன் சேர்ந்து மிகவும் அழகாக பாடினார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

aaradhana
Aaradhana

மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா இதற்கு முன்னர் இணைந்து பாடிய ‘கனா’ படத்தில் உள்ள “யார் இந்த தேவதை” பாட்டு நல்ல வரவேப்பை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube Video Embed Credits Code: Thanthi Tv

Spread the Info

Leave a Comment