பாடல் ஆசிரியர் மற்றும் நடிகருமான சினேகன் மிகவும் பிரபலம் ஆனவர். இவர் பாண்டவர் பூமி படத்தில் ‘அவர் அவர் வாழ்க்கையில்’ , ‘தோழா தோழா’ , ‘ஞாபகம் வருதே’ , ‘மன்மதனே நீ கலைஞனா’ ஆகிய புகழ் பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார். அப்போதெல்லாம் அந்த அளவுக்கு பிரபலம் ஆகாத சினேகன் விஜய் டிவியின் ”பிக் பாஸ்’ மூலம் பிரபலம் ஆனார். பிறகு நடிகர் கமலஹாசனுடன் நட்பு ஏற்பட்டு அவரது கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இணைந்தார். மேலும் 2021ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு தேர்தலில் வேட்பாளராக நின்று போட்டியிட்டார்.

மேலும் இவர் 2015ஆம் ஆண்டு ஏழைகள் பயன் பெரும் வகையில் ஒரு அறக்கட்டளை நடத்தி வந்தார். ஆனால் அந்த அறக்கட்டளை பெயரில் போலியான சில சமூக வலைத்தளங்கள் செயல்பட்டு வந்ததாகவும் அதில் பணம் வசூலித்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த சமூக வலைத்தளங்களை சின்ன திரை நடிகை ஜெயலட்சுமி நடித்த வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சினேகன் “என்னுடைய நண்பர்கள் சில நாட்களுக்கு முன்னர் அறக்கட்டளை பெயரில் சமூக வலைத்தளங்களில் பணம் வசூல் செய்வதாக கூறினார்.

மேலும் வருமான வரித்துறையினர் இந்த பண வசூலிப்பு பற்றி விசாரணை செய்தனர். மேலும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட இணையத்தின் முகவரியை பற்றி எழுதி எந்தவித பதிலும் தரவில்லை. அதிலுள்ள செல்போன் நம்பரில் பேசும் போது வெளியே சந்திக்க வேண்டும் என கூறினார், ஆனால் சென்று பார்த்தால் ஒரு அலுவலகமே இல்லை.

மேலும் அறக்கட்டளை யார் பெயரில் தொடங்கி உள்ளது என பார்க்கும் போது சின்னத்திரை நடிகை விஜயலட்சுமியின் பெயர் இருந்தது. இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தவேண்டும் என்று கூறியுள்ளேன்” என இவ்வாறு அவர் கூறினார்.