நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரன், பிரகாஷ் ராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்து வெளிவர இருக்கும் படம்தான் விருமன். முத்தையா இயக்கி உள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். இப்படத்தின் இயக்குனரான முத்தையா ஏற்கனவே கார்த்தியை வைத்து ‘கொம்பன்’ படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ள அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார்.

கிராமப் புற கதையை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கார்த்தி நடித்து இருந்த ‘பருத்தி வீரன்’ , ‘கொம்பன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததை அடுத்து, இப்படமும் மாபெரும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள முத்தையா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொள்ள வருகை தந்திருந்தார். அப்போது அவரது ரசிகர்கள் ‘ரோலெக்ஸ் ரோலெக்ஸ்’ என கூச்சலிட்டனர். மேலும் வரும் வழியில் ஆஸ்கார் நாயகனே, தேசிய விருது நாயகனே என்றெல்லாம் கட்அவுட் வைத்து உள்ளனர்.

தொடர்ந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் கத்தியதால் தொகுப்பாளர்கள் நீங்கள் அமைதியாக இருந்தால்தான் இந்நிகழ்ச்சியை ஆரம்பிக்க முடியும் என கூறினார். ஆனாலும் சத்தம் குறையவில்லை. உடனே சூர்யா எந்திரித்து உங்களுக்காக வந்துள்ளோம், உங்கள் இடத்திற்கு வந்துள்ளோம். நானும் கார்த்தியும் மேடையில் வருவோம் அது வரை கொஞ்சம் அமைதியாக இருங்கள் என கேட்டு கொண்டார்.
தொடந்து பேசிய சூர்யா இயக்குனர் அமீர் மற்றும் பாலா இல்லையெனில் நானும் தம்பியும் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்க மாட்டோம். அவர்கள் மிகவும் எங்கள் பயணத்தில் முக்கியமான மனிதர்கள். மேலும் இயக்குனர் சிங்கம் புலி தான் நடிக்க கற்று கொடுத்தவர். தில்லியும் ரோலெக்ஸ்ஸும் சண்ட போடணுமா என சூர்யா கூறியவுடன் நாங்களும் நிறைய சண்டை போட்ருக்கோம்னு ஜாலியாக கார்த்தி பதில் சொன்னார். விக்ரம் படத்தில் நடித்த ‘ரோலெக்ஸ்’ கதாபாத்திரத்துக்கு நடிகர் கமலஹாசன் ரோலெக்ஸ் வாட்சை பரிசாக கொடுத்தார் என்று வாட்சை தூக்கி காண்பித்தார். ஜாலியாக பேசிய சூர்யாவின் இந்த பேச்சு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.