நடிகர் சூர்யா தற்போது ‘வணங்கான்’ மற்றும் ‘வாடிவாசல்’ படங்களில் பிசியாக உள்ளார். இதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் தனது 42வது படத்தில் நடிக்க உள்ளார். முதல் முறையாக சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்க உள்ளதாக தகவல்களுக்கு வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை அகரம் அலுவலகத்தில் போடப்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா பூஜை போடுவது போல் புகைப்படம் வெளியாகி உள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சூர்யா கடைசியாக சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

சிறுத்தை சிவா கடைசியாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து எடுத்த ‘அண்ணாதே’ திரைப்படம் சரியான வரவேற்பை பெறாததால் இப்படத்தில் கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிவா படம் இயக்குவார் என எதிர் பார்க்கலாம். மேலும் இப்படம் எப்படி இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
